ஜோதிட சாஸ்திரமும் அதன் பிரிவுகளும்


ஜ்யோதிஷம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய அல்லது ஒளியினுடைய சாஸ்திரம் என்று பொருள் .மனிதனுக்கு கண் முக்கிய உறுப்பாக இருப்பது போன்று வேதத்திற்கு கண்ணாகத் திகழ்வது ஜ்யோதிஷம். இந்த ஜோதிட சாஸ்திரமானது மூன்று பெரும் பிரிவுகளை கொண்டதாகும். அவை

  1. கணிதஸ்கந்தம்
  2. ஜாதகஸ்கந்தம்
  3. ஸம்ஹிதாஸ் கந்தம்


கணிதஸ்கந்தம்

இது மூன்று பிரிவுகளை கொண்டதாகும் அவை

  1. சித்தாந்தம் - சிருஷ்டி
  2. தந்திரம் - யுகம்
  3. கரணம் - இஷ்ட சக ஆண்டுகள்


ஜாதகஸ்கந்தம்

இது இரண்டு பிரிவுகளை கொண்டது அவை

  1. ஹோரை
  2.  தாஜிகம்

ஹோரை

ஜாதகர் பிறந்த காலத்தில் காணப்பட்ட கோள்களின் அமைப்பைக் கொண்டுப் பலன்களைக் கூறும் முறை ஹோரையாகும்.

தாஜிகம் 

கோச்சாரம் எனப்படும் ஜாதகரின் சோதனை காலத்தில் கோள்களின் நிலைகளைக் கொண்டு பலன் கூறப்பயன்படுவது தாஜிகமாகும்.



ஸம்ஹிதாஸ்கந்தம் 

இது நான்கு பிரிவுகளைக் கொண்டதாகும் அவை

  1. முகூர்த்தம்
  2. வாஸ்து
  3. வருஷபணி
  4. ஆரூடம்

முகூர்த்தம் 

சுப நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்கும் வழியைக் காட்டுவது முகூர்த்தம் ஆகும்

வாஸ்து

வீடுகள் , கோவில்கள் , அரண்மனைகள் , சத்திரம் மற்றும் மடம் முதலியவற்றைக் கட்டவும்; குளம் மற்றும் கிணறு தோண்ட போன்றவற்றிற்கு நல்ல நேரம் தேர்ந்தெடுக்க வழிகாட்டுவது வாஸ்து ஆகும்

வருஷபணி

உலகின் நன்மைகள் தீமைகள் மழை இயற்கையின் அம்ஸங்கள் முன்னறிவிப்பைத் தருவது வருஷபணி  ஆகும்

ஆருடம் 

ஆருடம் என்பதற்கு ஏறியிருத்தல் என்று பொருள் ஒருவர் தன்மனதில் ஒரு செயலை நினைத்துக்கொண்டு தான் கொண்டு வந்த காரியம் இனிதே நிறைவேறுமா என்று கேட்க அப்பொழுதுள்ள கோள்களின் நிலையைக் கொண்டும் பஞ்சபட்சி முதலியவற்றைக் கொண்டு பலன் கூறுதல்.


Post a Comment

أحدث أقدم